Listen to this chapter
1
1. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்துவேண்டும் பனுவல் துணிவு
2
2. துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்துஇறந்தாரை எண்ணிக்கொண் டற்று
3
3. இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்பெருமை பிறங்கிற் றுலகு
4
4. உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்வரனென்னும் வைப்பிற்கோர் வித்து
5
5. ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்இந்திரனே சாலுங் கரி
6
6. செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்செயற்கரிய செய்கலா தார்
7
7. சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்வகைதெரிவான் கட்டே உலகு
8
8. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்துமறைமொழி காட்டி விடும்
9
9. குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளிகணமேயுங் காத்தல் அரிது
10
10. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்