அதிகாரம் 25

அருளுடைமை

Listen to this chapter

1
1. அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்பூரியார் கண்ணு முள
2
2. நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால்தேரினும் அஃதே துணை
3
3. அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்தஇன்னா உலகம் புகல்
4
4. மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்பதன்னுயி ரஞ்சும் வினை
5
5. அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்குமல்லன்மா ஞாலங் கரி
6
6. பொருள்நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கிஅல்லவை செய்தொழுகு வார்
7
7. அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கிவ்வுலகம் இல்லாகி யாங்கு
8
8. பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்அற்றார்மற் றாதல் அரிது
9
9. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்அருளாதான் செய்யும் அறம்
10
10. வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்மெலியார்மேற் செல்லு மிடத்து
← புகழ் புலால் மறுத்தல் →