அதிகாரம் 26

புலால் மறுத்தல்

Listen to this chapter

1
1. படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன்உடல்சுவை யுண்டார் மனம்
2
2. அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்பொருளல்ல தவ்வூன் தினல்
3
3. உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ணஅண்ணாத்தல் செய்யா தளறு
4
4. தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்
5
5. உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்புண்ண துணர்வார்ப் பெறின்
6
6. செயிரின் தலைப்பிரிந்த காட்சியா ருண்ணார்உயிரின் தலைப்பிரிந்த ஊன்
7
7. அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்உயிர்செகுத் துண்ணாமை நன்று
8
8. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பிஎல்லா உயிருந் தொழும்
9
9. தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்எங்ஙனம் ஆளும் அருள்
10
10. பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சிஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு
← அருளுடைமை தவம் →