Listen to this chapter
1
1. உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமைஅற்றே தவத்திற் குரு
2
2. தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனைஅஃதிலார் மேற்கொள் வது
3
3. துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்மற்றை யவர்கள் தவம்
4
4. ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்எண்ணின் தவத்தான் வரும்
5
5. வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்ஈண்டு முயலப் படும்
6
6. தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு
7
7. சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்சுடச்சுட நோற்கிற் பவர்க்கு
8
8. தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனையமன்னுயி ரெல்லாந் தொழும்
9
9. கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின்ஆற்றல் தலைப்பட் டவர்க்கு
10
10. இலர்பல ராகிய காரணம் நோற்பார்சிலர்பலர் நோலா தவர்