Listen to this chapter
1
1. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்ஐந்தும் அகத்தே நகும்
2
2. வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத்தானறி குற்றப் படின்
3
3. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று
4
4. தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்துவேட்டுவன் புள்சிமிழ்த் தற்று
5
5. பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்றேதம் பலவுந் தரும்
6
6. நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்துவாழ்வாரின் வன்கணா ரில்
7
7. புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றிமூக்கிற் கரியா ருடைத்து
8
8. மனத்தது மாசாக மாண்டார்நீ ராடிமறைந்தொழுகு மாந்தர் பலர்
9
9. கணைகொடியது யாழ்கோடு செவ்விதாங் கனைவினைபடு பாலாற் கொளல்
10
10. மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்பழித்த தொழித்து விடின்