அதிகாரம் 29

கள்ளாமை

Listen to this chapter

1
1. எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்கள்ளாமை காக்கதன் நெஞ்சு
2
2. உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்கள்ளத்தால் கள்வே மெனல்
3
3. களவினா லாகிய ஆக்கம் அளவிறந்தாவது போலக் கெடும்
4
4. களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்வீயா விழுமந் தரும்
5
5. அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்
6
6. அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்கன்றிய காத லவர்
7
7. களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும்ஆற்றல் புரிந்தார்க ணில்
8
8. அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்களவறிந்தார் நெஞ்சில் கரவு
9
9. அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்லமற்றைய தேற்றா தவர்
10
10. கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்தள்ளாது புத்தே ளுலகு
← கூடாவொழுக்கம் வாய்மை →