அதிகாரம் 30

வாய்மை

Listen to this chapter

1
1. வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றந்தீமை யிலாத சொலல்
2
2. பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்தநன்மை பயக்கு மெனின்
3
3. தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்தன்நெஞ்சே தன்னைச் சுடும்
4
4. உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்உள்ளத்து ளெல்லாம் உளன்
5
5. மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடுதானஞ்செய் வாரின் தலை
6
6. பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமைஎல்லா அறமுந் தரும்
7
7. பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிறசெய்யாமை செய்யாமை நன்று
8
8. புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மைவாய்மையால் காணப் படும்
9
9. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்பொய்யா விளக்கே விளக்கு
10
10. யாமெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும்வாய்மையின் நல்ல பிற
← கள்ளாமை வெகுளாமை →