Listen to this chapter
1
1. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம்
2
2. சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்ஏமப் புணையைச் சுடும்
3
3. சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடுநிலத்தறைந்தான் கைபிழையா தற்று
4
4. இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்புணரின் வெகுளாமை நன்று
5
5. உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்உள்ளான் வெகுளி யெனின்
6
6. இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்துறந்தார் துறந்தார் துணை
7
7. செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கினென் காவாக்கா லென்
8
8. செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்லதனின் தீய பிற
9
9. மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீயபிறத்தல் அதனான் வரும்
10
10. நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்பகையும் உளவோ பிற