Listen to this chapter
1
1. சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னாசெய்யாமை மாசற்றார் கோள்
2
2. கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னாசெய்யாமை மாசற்றார் கோள்
3
3. செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்உய்யா விழுமந் தரும்
4
4. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயஞ் செய்து விடல்
5
5. அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்தந்நோய்போற் போற்றாக் கடை
6
6. இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமைவேண்டும் பிறன்கட் செயல்
7
7. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்மாணாசெய் யாமை தலை
8
8. தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோமன்னுயிர்க் கின்னா செயல்
9
9. பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னாபிற்பகல் தாமே வரும்
10
10. நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்நோயின்மை வேண்டு பவர்