அதிகாரம் 33

கொல்லாமை

Listen to this chapter

1
1. அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்பிறவினை எல்லாந் தரும்
2
2. பகுத்துணடு பல்லுயி ரோம்புதல் நூலோர்தொகுத்தவற்று ளெல்லாந் தலை
3
3. ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்பின்சாரப் பொய்யாமை நன்று
4
4. நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்கொல்லாமை சூழும் நெறி
5
5. நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்கொல்லாமை சூழ்வான் தலை
6
6. கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்செல்லா துயிருண்ணுங் கூற்று
7
7. தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறிதின்னுயிர் நீக்கும் வினை
8
8. நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்கொன்றாகும் ஆக்கங் கடை
9
9. கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்புன்மை தெரிவா ரகத்து
10
10. உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்செல்லாத்தீ வாழ்க்கை யவர்
← இன்னாசெய்யாமை நிலையாமை →