அதிகாரம் 34

நிலையாமை

Listen to this chapter

1
1. நில்லாத வற்றை நிலையின என்றுணரும்புல்லறி வாண்மை கடை
2
2. கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்போக்கும் அருவிளிந் தற்று
3
3. அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்அற்குப ஆங்கே செயல்
4
4. நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்வாள துணர்வார்ப் பெறின்
5
5. நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினைமேற்சென்று செய்யாப் படும்
6
6. நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை யுடைத்திவ் வுலகு
7
7. ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுபகோடியு மல்ல பல
8
8. குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றேஉடம்போ டுயிரிடை நட்பு
9
9. உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கிவிழிப்பது போலும் பிறப்பு
10
10. புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள்துச்சி லிருந்த உயிர்க்கு
← கொல்லாமை துறவு →