அதிகாரம் 35

துறவு

Listen to this chapter

1
1. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்அதனின் அதனின் அலன்
2
2. வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்ஈண்டியற் பால பல
3
3. அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்வேண்டிய வெல்லாம் ஒருங்கு
4
4. இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமைமயலாகும் மற்றும் பெயர்த்து
5
5. மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்உற்றார்க் குடம்பும் மிகை
6
6. யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்குயர்ந்த உலகம் புகும்
7
7. பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்பற்றி விடாஅ தவர்க்கு
8
8. தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கிவலைப்பட்டார் மற்றை யவர்
9
9. பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்றுநிலையாமை காணப் படும்
10
10. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்பற்றுக பற்று விடற்கு
← நிலையாமை மெய்யுணர்தல் →