Listen to this chapter
1
1. பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்செம்பொருள் காண்ப தறிவு
2
2. சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்சார்தரா சார்தரு நோய்
3
3. காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்நாமங் கெடக்கெடு நோய்
4
4. பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்மருளானாம் மாணாப் பிறப்பு
5
5. இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கிமாசறு காட்சி யவர்க்கு
6
6. ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்வான நணிய துடைத்து
7
7. ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றேமெய்யுணர் வில்லா தவர்க்கு
8
8. எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவு
9
9. கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்மற்றீண்டு வாரா நெறி
10
10. ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்பேர்த்துள்ள வேண்டா பிறப்பு