அதிகாரம் 37

அவாவறுத்தல்

Listen to this chapter

1
1. அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்தவாஅப் பிறப்பீனும் வித்து
2
2. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றதுவேண்டாமை வேண்ட வரும்
3
3. வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லைஆண்டும் அஃதொப்ப தில்
4
4. தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றதுவாஅய்மை வேண்ட வரும்
5
5. அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார்அற்றாக அற்ற திலர்
6
6. அஞ்சுவ தோரும் அறனே ஒருவனைவஞ்சிப்ப தோரும் அவா
7
7. அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினைதான்வேண்டு மாற்றான் வரும்
8
8. அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேல்தவாஅது மேன்மேல் வரும்
9
9. இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந்துன்பத்துள் துன்பங் கெடின்
10
10. ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையேபேரா இயற்கை தரும்
← மெய்யுணர்தல் ஊழ் →