Listen to this chapter
1
1. ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்போகூழால் தோன்று மடி
2
2. பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்ஆகலூ ழுற்றக் கடை
3
3. நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்உண்மை யறிவே மிகும்
4
4. இருவே றுலகத் தியற்கை திருவேறுதெள்ளிய ராதலும் வேறு
5
5. நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும்நல்லவாஞ் செல்வஞ் செயற்கு
6
6. பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்சொரியினும் போகா தம
7
7. வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடிதொகுத்தார்க்குந் துய்த்த லரிது
8
8. துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பாலஊட்டா கழியு மெனின்
9
9. நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்அல்லற் படுவ தெவன்
10
10. ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்றுசூழினுந் தான்முந் துறும்