Listen to this chapter
1
1. படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்உடையான் அரசரு ளேறு
2
2. அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்எஞ்சாமை வேந்தற் கியல்பு
3
3. தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்நீங்கா நிலனாள் பவற்கு
4
4. அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்காமான முடைய தரசு
5
5. இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்தவகுத்தலும் வல்ல தரசு
6
6. காட்சி கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்மீக்கூறும் மன்னன் நிலம்
7
7. இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்தான்கண் டனைத்திவ் வுலகு
8
8. முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கிறையென்று வைக்கப் படும்
9
9. செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்கவிகைக்கீழ்த் தங்கு முலகு
10
10. கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்உடையானாம் வேந்தர்க் கொளி