Listen to this chapter
1
1. வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்துணைவலியுந் தூக்கிச் செயல்
2
2. ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்செல்வார்க்குச் செல்லாத தில்
3
3. உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கிஇடைக்கண் முரிந்தார் பலர்
4
4. அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னைவியந்தான் விரைந்து கெடும்
5
5. பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்சால மிகுத்துப் பெயின்
6
6. நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்உயிர்க்கிறுதி ஆகி விடும்
7
7. ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள்போற்றி வழங்கு நெறி
8
8. ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லைபோகா றகலாக் கடை
9
9. அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோலஇல்லாகித் தோன்றாக் கெடும்
10
10. உளவரை தூக்காத ஒப்புர வாண்மைவளவரை வல்லைக் கெடும்