Listen to this chapter
1
1. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்இடங்கண்ட பின்னல் லது
2
2. முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்ஆக்கம் பலவுந் தரும்
3
3. ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்துபோற்றார்கண் போற்றிச் செயின்
4
4. எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்துதுன்னியார் துன்னிச் செயின்
5
5. நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்நீங்கின் அதனைப் பிற
6
6. கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்நாவாயும் ஓடா நிலத்து
7
7. அஞ்சாமை யல்லால் துணைவேண்டா எஞ்சாமைஎண்ணி யிடத்தாற் செயின்
8
8. சிறுபடையான் செல்லிடஞ் சேரின் உறுபடையான்ஊக்கம் அழிந்து விடும்
9
9. சிறைநலனுஞ் சீறும் இலரெனினும் மாந்தர்உறைநிலத்தோ டொட்ட லரிது
10
10. காலாழ் களரின் நரியடுங் கண்ணஞ்சாவேலாள் முகத்த களிறு