Listen to this chapter
1
1. அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்திறந்தெரிந்து தேறப் படும்
2
2. குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்நாணுடையான் கட்டே தெளிவு
3
3. அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால்இன்மை அரிதே வெளிறு
4
4. குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள்மிகைநாடி மிக்க கொளல்
5
5. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தங்கருமமே கட்டளைக் கல்
6
6. அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்பற்றிலர் நாணார் பழி
7
7. காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்பேதைமை எல்லாந் தரும்
8
8. தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறைதீரா இடும்பை தரும்
9
9. தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்தேறுக தேறும் பொருள்
10
10. தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும்தீரா இடும்பை தரும்