Listen to this chapter
1
1. எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்வேறாகும் மாந்தர் பலர்
2
2. அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்சிறந்தானென் றேவற்பாற் றன்று
3
3. செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடெய்த உணர்ந்து செயல்
4
4. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்ததனை அவன்கண் விடல்
5
5. வினைக்குரிமை நாடிய பின்றை அவனைஅதற்குரிய னாகச் செயல்
6
6. வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாகநினைப்பானை நீங்குந் திரு
7
7. நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்கோடாமை கோடா துலகு
8
8. நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்ததன்மையான் ஆளப் படும்
9
9. வாரி பெருக்கி வளம்படுத் துற்றவைஆராய்வான் செய்க வினை
10
10. அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்நன்குடையான் கட்டே தெளிவு