Listen to this chapter
1
1. ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்தேர்ந்துசெய் வஃதே முறை
2
2. வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்கோனோக்கி வாழுங் குடி
3
3. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்நின்றது மன்னவன் கோல்
4
4. குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன்அடிதழீஇ நிற்கும் உலகு
5
5. இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்டபெயலும் விளையுளுந் தொக்கு
6
6. வேலன்று வென்றி தருவது மன்னவன்கோலதூஉங் கோடா தெனின்
7
7. இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனைமுறைகாக்கும் முட்டாச் செயின்
8
8. எண்பதத்தான் ஓரா முரறசெய்யா மன்னவன்தண்பதத்தான் தானே கெடும்
9
9. டிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்வடுவன்று வேந்தன் தொழில்
10
10. கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்களைகட் டதனொடு நேர்