அதிகாரம் 56

கொடுங்கோன்மை

Listen to this chapter

1
1. கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டல்லவை செய்தொழுகும் வேந்து
2
2. வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்கோலொடு நின்றான் இரவு
3
3. நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்நாடொறும் நாடு கெடும்
4
4. கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்சூழாது செய்யும் அரசு
5
5. அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றேசெல்வத்தைத் தேய்க்கும் படை
6
6. மன்னார்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்மன்னாவாம் மன்னர்க் கொளி
7
7. துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன்அளியின்மை வாழும் உயிர்க்கு
8
8. இன்மையின் இன்னா துடைமை முறைசெய்யாமன்னவன் கோற்கீழ்ப் படின்
9
9. முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடிஒல்லாது வானம் பெயல்
10
10. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்காவலன் காவான் எனின்
← செங்கோன்மை வெருவந்தசெயாமை →