அதிகாரம் 57

வெருவந்தசெயாமை

Listen to this chapter

1
1. கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்நீடின்றி ஆங்கே கெடும்
2
2. கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன்அடுமுரண் தேய்க்கும் அரம்
3
3. இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்சீறிற் சிறுகுந் திரு
4
4. செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்வெருவந்து வெய்து கெடும்
5
5. கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்லதில்லை நிலக்குப் பொறை
6
6. தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்ஒத்தாங் கொறுப்பது வேந்து
7
7. கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம்நீங்காமை வேண்டு பவர்
8
8. வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்ஒருவந்தம் ஒல்லைக் கெடும்
9
9. இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்உறைகடுகி ஒல்லைக் கெடும்
10
10. அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்பேஎய்கண் டன்ன துடைத்து
← கொடுங்கோன்மை கண்ணோட்டம் →