அதிகாரம் 58

கண்ணோட்டம்

Listen to this chapter

1
1. கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகைஉண்மையான் உண்டிவ் வுலகு
2
2. கண்ணோட்டத் துள்ள துலகியல் அஃதிலார்உண்மை நிலக்குப் பொறை
3
3. பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்கண்ணோட்டம் இல்லாத கண்
4
4. உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினாற்கண்ணோட்டம் இல்லாத கண்
5
5. கண்ணிற் கணிகலங் கண்ணோட்டம் அஃதின்றேற்புண்ணென் றுணரப் படும்
6
6. மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோடியைடந்துகண் ணோடா தவர்
7
7. கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்கண்ணோட்டம் இன்மையும் இல்
8
8. கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்குரிமை உடைத்திவ் வுலகு
9
9. ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்பொறுத்தாற்றும் பண்பே தலை
10
10. பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்கநாகரிகம் வேண்டு பவர்
← வெருவந்தசெயாமை ஒற்றாடல் →