Listen to this chapter
1
1. ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்தெற்றென்க மன்னவன் கண்
2
2. எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்வல்லறிதல் வேந்தன் தொழில்
3
3. ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்கொற்றங் கொளக்கிடந்த தில்
4
4. வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங்கனைவரையும் ஆராய்வ தொற்று
5
5. கடாஅ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும்உகாஅமை வல்லதே ஒற்று
6
6. துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்தென்செயினுஞ் சோர்வில தொற்று
7
7. மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவைஐயப்பா டில்லதே ஒற்று
8
8. ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்ஒற்றினால் ஒற்றிக் கொளல்
9
9. ஒற்றொற் றுணராமை யாள்க உடன்மூவர்சொற்றொக்க தேறப் படும்
10
10. சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யிற்புறப்படுத்தான் ஆகும் மறை