அதிகாரம் 60

ஊக்கமுடைமை

Listen to this chapter

1
1. உடையர் எனப்படுவ தூக்கமஃ தில்லார்உடைய துடையரோ மற்று
2
2. உள்ள முடைமை உடைமை பொருளுடைமைநில்லாது நீங்கி விடும்
3
3. ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம்ஒருவந்தங் கைத்துடை யார்
4
4. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலாஊக்க முடையா னுழை
5
5. வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்உள்ளத் தனைய துயர்வு
6
6. உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினுந் தள்ளாமை நீர்த்து
7
7. சிதைவிடத் தொல்கார் உரவோர் புதையம்பிற்பட்டுப்பா டூன்றுங் களிறு
8
8. உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்துவள்ளியம் என்னுஞ் செருக்கு
9
9. பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானைவெரூஉம் புலிதாக் குறின்
10
10. உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்மரமக்க ளாதலே வேறு
← ஒற்றாடல் மடியின்மை →