அதிகாரம் 61

மடியின்மை

Listen to this chapter

1
1. குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்மாசூர மாய்ந்து கெடும்
2
2. மடியை மடியா ஒழுகல் குடியைக்குடியாக வேண்டு பவர்
3
3. மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்தகுடிமடியுந் தன்னினு முந்து
4
4. குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்துமாண்ட உஞற்றி லவர்க்கு
5
5. நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்கெடுநீரார் காமக் கலன்
6
6. படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்மாண்பயன் எய்தல் அரிது
7
7. இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்துமாண்ட உஞற்றி லவர்
8
8. மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னென்னார்க்கடிமை புகுத்தி விடும்
9
9. குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்மடியாண்மை மாற்றக் கெடும்
10
10. மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்தாஅய தெல்லாம் ஒருங்கு
← ஊக்கமுடைமை ஆள்வினையுடைமை →