Listen to this chapter
1
1. ஊழையும் உப்பக்கங் காண்பர் உலைவின்றித்தாழா துஞற்று பவர்
2
2. அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்பெருமை முயற்சி தரும்
3
3. வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறைதீர்ந்தாரின் தீர்ந்தன் றுலகு
4
4. தாளாண்மை என்னுந் தகைமைக்கண் தங்கிற்றேவேளாண்மை என்னுஞ் செருக்கு
5
5. தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகைவாளாண்மை போலக் கெடும்
6
6. இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்துன்பம் துடைத்தூன்றும் தூண்
7
7. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும்
8
8. மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்தாளுளாள் தாமரையி னாள்
9
9. பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந்தாள்வினை இன்மை பழி
10
10. தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்