அதிகாரம் 66

வினைத்தூய்மை

Listen to this chapter

1
1. துணைநலம் ஆக்கந் தரூஉம் வினைநலம்வேண்டிய எல்லாந் தரும்
2
2. என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடுநன்றி பயவா வினை
3
3. ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்குஞ் செய்வினைஆஅது மென்னு மவர்
4
4. இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்நடுக்கற்ற காட்சி யவர்
5
5. எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்மற்றன்ன செய்யாமை நன்று
6
6. ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்கசான்றோர் பழிக்கும் வினை
7
7. பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்கழிநல் குரவே தலை
8
8. கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாம்முடிந்தாலும் பீழை தரும்
9
9. அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்பிற்பயக்கும் நற்பா லவை
10
10. சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்கலத்துணீர் பெய்திரீஇ யற்று
← சொல்வன்மை வினைத்திட்பம் →