Listen to this chapter
1
1. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்பண்புடைமை தூதுரைப்பான் பண்பு
2
2. அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கின்றி யமையாத மூன்று
3
3. நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்வென்றி வினையுரைப்பான் பண்பு
4
4. அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன்செறிவுடையான் செல்க வினைக்கு
5
5. தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லிநன்றி பயப்பதாந் தூது
6
6. கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்தக்க தறிவதாந் தூது
7
7. கடனறிந்து காலங் கருதி இடனறிந்தெண்ணி உரைப்பான் தலை
8
8. தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்வாய்மை வழியுரைப்பான் பண்பு
9
9. விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்வாய்சோரா வன்க ணவன்
10
10. இறுதி பயப்பினும் எஞ்சா திறைவற்குறுதி பயப்பதாம் தூது