Listen to this chapter
1
1. அகலா தணுகாது தீக்காய்வார் போல்கஇகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்
2
2. மன்னர் விழைப விழையாமை மன்னரான்மன்னிய ஆக்கந் தரும்
3
3. போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்தேற்றுதல் யார்க்கும் அரிது
4
4. செவிச்சொல்லுஞ் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்ஆன்ற பெரியா ரகத்து
5
5. எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளைவிட்டக்காற் கேட்க மறை
6
6. குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பிலவேண்டுப வேட்பச் சொலல்
7
7. வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்கேட்பினும் சொல்லா விடல்
8
8. இளையர் இனமுறையர் என்றிகழார் நின்றஒளியோ டொழுகப் படும்
9
9. கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்துளக்கற்ற காட்சி யவர்
10
10. பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்கெழுதகைமை கேடு தரும்