Listen to this chapter
1
1. கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்மாறாநீர் வையக் கணி
2
2. ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்தெய்வத்தோ டொப்பக் கொளல்
3
3. குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்யாது கொடுத்துங் கொளல்
4
4. குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனைஉறுப்போ ரனையரால் வேறு
5
5. குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்என்ன பயத்தவோ கண்
6
6. அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்கடுத்தது காட்டும் முகம்
7
7. முகத்தின் முதுக்குறைந்த துண்டோ உவப்பினும்காயினும் தான்முந் துறும்
8
8. முகநோக்கி நிற்க அமையும் அகநோக்கிஉற்ற துணர்வார்ப் பெறின்
9
9. பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்வகைமை உணர்வார்ப் பெறின்
10
10. நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்காற்கண்ணல்ல தில்லை பிற