Listen to this chapter
1
1. வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்தொகையறிந்த தூய்மை யவர்
2
2. கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்கற்ற செலச்சொல்லு வார்
3
3. பகையகத்துச் சாவார் எளியர் அரியர்அவையகத் தஞ்சா தவர்
4
4. கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாங்கற்றமிக்காருள் மிக்க கொளல்
5
5. ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சாமாற்றங் கொடுத்தற் பொருட்டு
6
6. வாளொடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடென்நுண்ணவை அஞ்சு பவர்க்கு
7
7. பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்தஞ்சு மவன்கற்ற நூல்
8
8. பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்நன்கு செலச்சொல்லா தார்
9
9. கல்லா தவரிற் கடையென்ப கற்றறிந்தும்நல்லா ரவையஞ்சு வார்
10
10. உளரெனினும் இல்லாரொ டொப்பர் களனஞ்சிக்கற்ற செலச்சொல்லா தார்