Listen to this chapter
1
1. தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்செல்வருஞ் சேர்வது நாடு
2
2. பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால்ஆற்ற விளைவது நாடு
3
3. பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கிறையொருங்கு நேர்வது நாடு
4
4. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்சேரா தியல்வது நாடு
5
5. பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்கொல்குறும்பும் இல்லது நாடு
6
6. கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றாநாடென்ப நாட்டின் தலை
7
7. இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்வல்லரணும் நாட்டிற் குறுப்பு
8
8. பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து
9
9. நாடென்ப நாடா வளத்தன நாடல்லநாட வளந்தரு நாடு
10
10. ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றேவேந்தமை வில்லாத நாடு