Listen to this chapter
1
1. ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்போற்று பவர்க்கும் பொருள்
2
2. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்காடும் உடைய தரண்
3
3. உயர்வகலந் திண்மை அருமையிந் நான்கின்அமைவரண் என்றுரைக்கும் நூல்
4
4. சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகைஊக்கம் அழிப்ப தரண்
5
5. கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்நிலைக்கெளிதாம் நீர தரண்
6
6. எல்லாப் பொருளும் உடைத்தா யிடத்துதவும்நல்லா ளுடைய தரண்
7
7. முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்பற்றற் கரிய தரண்
8
8. முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்பற்றியார் வெல்வ தரண்
9
9. முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்துவீறெய்தி மாண்ட தரண்
10
10. எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சிஇல்லார்கண் இல்ல தரண்