Listen to this chapter
1
1. சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்இல்லாயின் வெல்லும் படை
2
2. நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானைதலைமக்கள் இல்வழி இல்
3
3. உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்வெறுக்கையுள் எல்லாம் தலை
4
4. உலைவிடத் தூறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்தொல்படைக் கல்லால் அரிது
5
5. ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகைநாகம் உயிர்ப்பக் கெடும்
6
6. அழிவின் றறைபோகா தாகி வழிவந்தவன்க ணதுவே படை
7
7. கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்ஆற்ற லதுவே படை
8
8. மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்எனநான்கே ஏமம் படைக்கு
9
9. தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்தபோர்தாங்கும் தன்மை அறிந்து
10
10. அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானைபடைத்தகையால் பாடு பெறும்