அதிகாரம் 78

படைச்செருக்கு

Listen to this chapter

1
1. என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னைமுன்னின்று கல்நின் றவர்
2
2. கான முயலெய்த அம்பினில் யானைபிழைத்தவேல் ஏந்தல் இனிது
3
3. பேராண்மை என்ப தறுகனொன் றுற்றக்கால்ஊராண்மை மற்றதன் எஃகு
4
4. கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்மெய்வேல் பறியா நகும்
5
5. விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்ஓட்டன்றோ வன்க ணவர்க்கு
6
6. விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்வைக்குந்தன் நாளை எடுத்து
7
7. சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்கழல்யாப்புக் காரிகை நீர்த்து
8
8. உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன்செறினுஞ்சீர் குன்றல் இலர்
9
9. இழைத்த திகவாமைச் சாவாரை யாரேபிழைத்த தொறுக்கிற் பவர்
10
10. புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடிரந்துகோட் டக்க துடைத்து
← படைமாட்சி நட்பு →