Listen to this chapter
1
1. செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்வினைக்கரிய யாவுள காப்பு
2
2. நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்பின்னீர பேதையார் நட்பு
3
3. நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும்பண்புடை யாளர் தொடர்பு
4
4. நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்மேற்சென் றிடித்தற் பொருட்டு
5
5. புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்நட்பாங் கிழமை தரும்
6
6. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்தகநக நட்பது நட்பு
7
7. அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்கண்அல்லல் உழப்பதாம் நட்பு
8
8. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கேஇடுக்கண் களைவதாம் நட்பு
9
9. நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றிஒல்லும்வாய் ஊன்றும் நிலை
10
10. இனையர் இவரெமக் கின்னம்யாம் என்றுபுனையினும் புல்லென்னும் நட்பு