அதிகாரம் 80

நட்பாராய்தல்

Listen to this chapter

1
1. நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்வீடில்லை நட்பாள் பவர்க்கு
2
2. ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறைதான்சாம் துயரம் தரும்
3
3. குணனும் குடிமையும் குற்றமும் குன்றாஇனனும் அறிந்தியாக்க நட்பு
4
4. குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு
5
5. அழச்சொல்லி அல்ல திடித்து வழக்கறியவல்லார்நட் பாய்ந்து கொளல்
6
6. கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரைநீட்டி அளப்பதோர் கோல்
7
7. ஊதியம் என்ப தொருவற்குப் பேதையார்கேண்மை ஒரீஇ விடல்
8
8. உள்ளற்க உள்ளஞ் சிறுகுவ கொள்ளற்கஅல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு
9
9. கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலைஉள்ளினும் உள்ளஞ் சுடும்
10
10. மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்துமஒருவுக ஒப்பிலார் நட்பு
← நட்பு பழமை →