Listen to this chapter
1
1. பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும்கிழமையைக் கீழ்ந்திடா நட்பு
2
2. நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்குப்பாதல் சான்றோர் கடன்
3
3. பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமைசெய்தாங் கமையாக் கடை
4
4. விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்கேளாது நட்டார் செயின்
5
5. பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்கநோதக்க நட்டார் செயின்
6
6. எல்லைக்கண் நின்றார் துறவார் தெலைவிடத்தும்தொல்லைக்கண் நின்றார் தொடர்பு
7
7. அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்வழிவந்த கேண்மை யவர்
8
8. கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்குநாளிழுக்கம் நட்டார் செயின்
9
9. கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மைவிடாஅர் விழையும் உலகு
10
10. விழையார் விழையப் படுப பழையார்கண்பண்பின் தலைப்பிரியா தார்