Listen to this chapter
1
1. ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மைசொல்லாடார் சோர விடல்
2
2. கனவினும் இன்னாது மன்னோ வினைவேறுசொல்வேறு பட்டார் தொடர்பு
3
3. எனைத்துங் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇமன்றிற் பழிப்பார் தொடர்பு
4
4. பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மைபெருகலிற் குன்றல் இனிது
5
5. உறினட் டறினொரூஉம் ஒப்பிலார் கேண்மைபெறினும் இழப்பினும் என்
6
6. உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவதுகொள்வாரும் கள்வரும் நேர்
7
7. அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார்தமரின் தனிமை தலை
8
8. செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மைஎய்தலின் எய்தாமை நன்று
9
9. பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்ஏதின்மை கோடி உறும்
10
10. நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்பத்தடுத்த கோடி உறும்