Listen to this chapter
1
1. சீரிடங் காணின் எறிதற்குப் பட்டடைநேரா நிரந்தவர் நட்பு
2
2. இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்மனம்போல வேறு படும்
3
3. பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்ஆகுதல் மாணார்க் கரிது
4
4. முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னாவஞ்சரை அஞ்சப் படும்
5
5. மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்சொல்லினால் தேறற்பாற் றன்று
6
6. நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்ஒல்லை உணரப் படும்
7
7. சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்தீங்கு குறித்தமை யான்
8
8. தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்அழுதகண் ணீரும் அனைத்து
9
9. மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்துநட்பினுட் சாப்புல்லற் பாற்று
10
10. பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட்டகநட் பொரீஇ விடல்