அதிகாரம் 85

புல்லறிவாண்மை

Listen to this chapter

1
1. அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மைஇன்மையா வையா துலகு
2
2. அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும்இல்லை பெறுவான் தவம்
3
3. அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழைசெறுவார்க்கும் செய்தல் அரிது
4
4. வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மைஉடையம்யாம் என்னும் செருக்கு
5
5. கல்லாத மேற்கொண் டொழுகல் கசடறவல்லதூஉம் ஐயம் தரும்
6
6. அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின்குற்றம் மறையா வழி
7
7. அருமறை சோரும் அறிவிலான் செய்யும்பெருமிறை தானே தனக்கு
8
8. ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்போஒம் அளவுமோர் நோய்
9
9. காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்கண்டானாம் தான்கண்ட வாறு
10
10. உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்தலகையா வைக்கப் படும்
← பேதைமை இகல் →