Listen to this chapter
1
1. இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்பண்பின்மை பாரிக்கும் நோய்
2
2. பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதிஇன்னாசெய் யாமை தலை
3
3. இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்தாவில் விளக்கம் தரும்
4
4. இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்துன்பத்துள் துன்பங் கெடின்
5
5. இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரேமிகலூக்கும் தன்மை யவர்
6
6. இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கைதவலும் கெடலும் நணித்து
7
7. மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்இன்னா அறிவி னவர்
8
8. இகலிற் கெதிர்சாய்தல் ஆக்கம் அதனைமிகலூக்கின் ஊக்குமாங் கேடு
9
9. இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனைமிகல்காணும் கேடு தரற்கு
10
10. இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்நன்னயம் என்னும் செருக்கு