அதிகாரம் 87

பகைமாட்சி

Listen to this chapter

1
1. கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்ஒல்லானை ஒல்லா தொளி
2
2. வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பாமெலியார்மேல் மேக பகை
3
3. அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்றுவ்வான்என்பரியும் ஏதிலான் துப்பு
4
4. அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்தஞ்சம் எளியன் பகைக்கு
5
5. நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்யாங்கணும் யார்க்கும் எளிது
6
6. வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்பண்பிலன் பற்றார்க் கினிது
7
7. காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்பேணாமை பேணப் படும்
8
8. கொடுத்துங் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்துமாணாத செய்வான் பகை
9
9. குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கினனிலனாம் ஏமாப் புடைத்து
10
10. செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலாஅஞ்சும் பகைவர்ப் பெறின்
← இகல் பகைத்திரந்தெறிதல் →