Listen to this chapter
1
1. நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்இன்னாவாம் இன்னா செயின்
2
2. வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுககேள்போல் பகைவர் தொடர்பு
3
3. உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்துமட்பகையின் மாணத் தெறும்
4
4. மனமாணா உட்பகை தோன்றின் இனமாணாஏதம் பலவும் தரும்
5
5. உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்ஏதம் பலவும் தரும்
6
6. ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்பொன்றாமை ஒன்றல் அரிது
7
7. செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதேஉட்பகை உற்ற குடி
8
8. அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருதுட்பகை உற்ற குடி
9
9. எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்உட்பகை உள்ளதாங் கேடு
10
10. உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்பாம்போ டுடனுறைந் தற்று