அதிகாரம் 90

பெரியாரைப்பிழையாமை

Listen to this chapter

1
1. ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்போற்றலுள் எல்லாம் தலை
2
2. பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்பேரா இடும்பை தரும்
3
3. கெடல்வேண்டிற் கேளாது செய்க அடல்வேண்டின்ஆற்று பவர்கண் இழுக்கு
4
4. கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்காற்றாதார் இன்னா செயல்
5
5. யாண்டுச்சென் றியாண்டும் உளராகார் வெந்துப்பின்வேந்து செறப்பட் டவர்
6
6. எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்பெரியார்ப் பிழைத்தொழுகு வார்
7
7. வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்தகைமாண்ட தக்கார் செறின்
8
8. குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடுநின்றன்னார் மாய்வர் நிலத்து
9
9. ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்துவேந்தனும் வேந்து கெடும்
10
10. இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்சிறந்தமைந்த சீரார் செறின்
← உட்பகை பெண்வழிச்சேறல் →