அதிகாரம் 91

பெண்வழிச்சேறல்

Listen to this chapter

1
1. மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்வேண்டாப் பொருளும் அது
2
2. பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்நாணாக நாணுத் தரும்
3
3. இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்நல்லாருள் நாணுத் தரும்
4
4. மனையாளை யஞ்சும் மறுமையி லாளன்வினையாண்மை வீறெய்த லின்று
5
5. இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்றும்நல்லார்க்கு நல்ல செயல்
6
6. இமையாரின் வாழினும் பாடிலரே யில்லாள்அமையார்தோ ளஞ்சு பவர்
7
7. பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்பெண்ணே பெருமை உடைத்து
8
8. நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்பெட்டாங் கொழுகு பவர்
9
9. அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்பெண்ணேவல் செய்வார்கண் இல்
10
10. எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்பெண்சேர்ந்தாம் பேதைமை இல்
← பெரியாரைப்பிழையாமை வரைவின் மகளீர் →