அதிகாரம் 92

வரைவின் மகளீர்

Listen to this chapter

1
1. அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்இன்சொல் இழுக்குத் தரும்
2
2. பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்நயன்தூக்கி நள்ளா விடல்
3
3. பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்ஏதில் பிணந்தழீஇ அற்று
4
4. பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்ஆயும் அறிவி னவர்
5
5. பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின்மாண்ட அறிவி னவர்
6
6. தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்புன்னலம் பாரிப்பார் தோள்
7
7. நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்பேணிப் புணர்பவர் தோள்
8
8. ஆயும் அறிவினர் அல்லார்க் கணங்கென்பமாய மகளிர் முயக்கு
9
9. வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்பூரியர்கள் ஆழும் அளறு
10
10. இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்திருநீக்கப் பட்டார் தொடர்பு
← பெண்வழிச்சேறல் கள்ளுண்ணாமை →