Listen to this chapter
1
1. வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று
2
2. ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்நன்றெய்தி வாழ்வதோர் ஆறு
3
3. உருளாயம் ஓவாது கூறிற் பொருளாயம்போஒய்ப் புறமே படும்
4
4. சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்வறுமை தருவதொன் றில்
5
5. கவறும் கழகமும் கையும் தருக்கிஇவறியார் இல்லாகி யார்
6
6. அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்முகடியான் மூடப்பட் டார்
7
7. பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்கழகத்துக் காலை புகின்
8
8. பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்தல்லல் உழப்பிக்கும் சூது
9
9. உடைசெல்வம் ஊணொளி கல்வியென் றைந்தும்அடையாவாம் ஆயங் கொளின்
10
10. இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்உழத்தொறூஉம் காதற் றுயிர்